Advertisment

முதல்வருக்காக நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸ்... சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம்... திமுக எம்.பி கனிமொழி அதிரடி கேள்வி!

dmk

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாகப் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதைத் தடுக்கும் வகையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதோடு, கரோனா குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றன. இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி செல்வதற்காக ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தியது தொடர்பாகச்சென்னை போலீஸ் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

Advertisment

Advertisment

இந்த நிலையில் திமுக எம்.பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்காக ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டது தொடர்பாகக் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், முதல்வர் அவர்களே, சில நாட்களுக்கு முன்பு, முழு முடக்கத்துக்குள் ஒரு முடக்கத்தை அறிவித்து, ஒட்டுமொத்த மக்களையும் வீதிக்குக் கொண்டு வந்தீர்கள். இப்போது உங்கள் வாகனங்கள் செல்வதற்காக அத்தியாவசியப் போக்குவரத்தையும், ஆம்புலன்ஸ்களையும் நிறுத்தி வைத்திருக்கிறீர்கள். அடடா! இதல்லவோ மக்கள் பணி என்றும் குறிப்பிட்டுள்ளார். அதோடு முதல்வருக்காக ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது குறித்து தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்று செய்தியை வெளியிட்டுள்ளது என்பது குறிப்படத்தக்கது.

admk Ambulance eps issues kanimozhi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe