கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அமமுக நிச்சயமாக வேட்பாளரை நிறுத்தும். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் வித்திசாயத்தில் வெற்றி பெறுவோம் என்று கூறினார்.
தினகரனின் இந்த பேச்சு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘’அமாவாசை சோறு தினந்தோறும் கிடைக்காது என்று ஒரு பழமொழி உள்ளது’’ என்று பதிலடி கொடுத்தார்.
அவர் மேலும் தினகரன் குறித்து, டிடிவி தினகரனுக்கு டோக்கன் செல்வன் என்ற பெயரும் உண்டு. கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாததால் ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் டிடிவி தினகரனை தேடிக்கொண்டிருக்கின்றனர் என்று கூறினார்.