Am Sivaprasad announced will contest on behalf Ammk erode east by-elections

Advertisment

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த முறை திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சிக்கே அந்த தொகுதியை ஒதுக்கியிருந்த நிலையில், இம்முறையும் காங்கிரஸ் கட்சி சார்பாக மறைந்த திருமகன் ஈ.வெ.ராவின் தந்தையும் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த முறை அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த தமாகா போட்டியிட்ட நிலையில், தற்போது நேரடியாக அதிமுகவே போட்டியிட உள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து போட்டியிடும் வேட்பாளர் குறித்து முன்னாள் அமைச்சர்களுடன் பழனிசாமி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். இது ஒரு புறம் இருக்க, மற்றொருபுறம் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் தாங்களும் போட்டியிடவுள்ளதாகவும், விரைவில் வேட்பாளரை அறிவிப்பதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், இடைத்தேர்தலில் அமமுக சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் ஏ.எம் சிவபிரசாத் போட்டியிடவுள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மக்கள்தான் முடிவு செய்வார்கள் என்றும் பணத்தை செலவு செய்தால் மட்டுமே தேர்தலில் வெற்றிபெற முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.