ADVERTISEMENT

'லடாக்னா என்னவென்று தெரியுமா' கேள்வி எழுப்பிய எம்.பிக்கு ஆளூர் ஷாநவாஸ் அதிரடி பதில்..!

03:01 PM Aug 08, 2019 | suthakar@nakkh…

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவு 370- ஐ, 35ஏ நீக்கும் மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதலை பெற்று, மத்திய அரசு நீக்கியது. இந்த அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவை மற்றும் மாநிலங்களைவையில் கொண்டு வந்து மசோதாவை நிறைவேற்றினார். மேலும் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக உருவாக்கப்படும் என அறிவித்தார். இதற்கு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் இது அப்பகுதி மக்களின் உரிமைகளை பறிக்கும் செயலாக இருக்கிறது என்றும் அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

ADVERTISEMENT



ADVERTISEMENT

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் லடாக் பகுதியை சேர்ந்த இளம் எம்.பி ஜம்யங்-நாம்கி நேற்று பாராளுமன்றத்தில் பேசினார். காஷ்மீர் மற்றும் லடாக்கை பிரித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பலர் லடாக்கிற்கு இதற்கு முன் வந்திருக்கிறார்களா? லடாக் என்றால் என்ன என்று தெரியுமா? என்று ஆவேசமாக பேசினார். இவரின் இந்த பேச்சுக்கு விசிக-வை சேர்ந்த ஆளூர் ஷாநவாஸ் அதிரடி விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது,

லடாக்னா என்னவென்று தெரியுமா? திமுக MPகளிடம் கோபப்பட்ட லடாக் MP!சரி, தமிழ்நாடுன்னா என்னவென்று தெரியுமா? அரசமைப்புச் சட்டத்தை முதலில் திருத்தினோம். இந்தித்திணிப்பை முறியடித்தோம். 69% சட்டமாக்கினோம். மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரி கட்டினோம்!
பிறகு ஏன் நீட்டை நீட்டுகிறீர்கள்?

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT