Advertisment

வரவேற்க வராத கூட்டணி கட்சியினர் -அதிர்ச்சியை காட்டிக்காத வேட்பாளர்

திருச்சி எம்.பி. தொகுதியை கடந்த இரண்டு முறையாக தக்க வைத்தது அதிமுக. இந்த முறை அதிமுக போட்டியிடாமல், கூட்டணி கட்சியான தேமுதிகவிற்கு இந்த தொகுதியை தள்ளிவிட்டது. இதற்கு காரணம், திருச்சி அ.தி.மு.க.வில் நிலவும் கோஷ்டி மோதல்தான். கோஷ்டி சண்டையில் அ.தி.மு.க. போட்டியிட்டால் வெற்றிபெற வாய்ப்பு இல்லை என்கிற உளவுத்துரையின் ரிப்போட் அடிப்படையிலே திருச்சியை தேமுதிகவிற்கு ஒதுக்கினார்கள்.

Advertisment

இந்த நிலையில் தேமுதிகவிற்கு திருச்சியில் ஏற்கனவே போட்டியிட்ட வேட்பாளர்கள் யாரும் போட்டியிட முன்வராதால் முதல்வர் எடப்பாடி ஊரை சேர்ந்த மருத்துவர் இளங்கோவன் என்பவர் திருச்சியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தேர்தல் களமான திருச்சிக்கு வேட்பாளர் மருத்துவர் இளங்கோவன் வருவதற்கு முன்னதாகவே அவருடைய சேலம் - தர்மபுரி நண்பர்கள் கட்சியினர் திருச்சிக்கு வந்து இறங்கினார்கள்.

Advertisment

Candidate shock

இளங்கோவனுக்காக திருச்சி தேமுதிக மா.செ. டி.வி.கணேசன் தலைமையில் அக்கட்சியினர், அ.தி.மு.க. மா.செ. குமார், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோரை தனித்தனியே சந்தித்தனர் ஆதரவை கேட்டும் தேர்தல் பிரச்சாரத்தை எப்படி எதிர்கொள்வது என்று ஆலோசனை நடத்தினார்கள். தேர்தல் பொறுப்பாளர்களாக 18 பேர் அறிவிப்பு வெளியான நிலையில் திருச்சி விமானநிலையத்தில் இன்று மதியம் வந்து இறங்கிய இளங்கோவனை கூட்டணி கட்சியை சேர்ந்த யாரும் வரவில்லை. தலைவர்கள் எல்லோரும் சென்னையில் இருந்தாலும் ஆளும் கட்சியை சேர்ந்த மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த ஒருத்தர் கூட வரவில்லை என்பதை அறிந்த தேமுதிக கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர்.

வேட்பாளர் இளகோவணுக்கு ஒரே ஆறுதல் அ.தி.மு.க.வில் இருக்கும் பேராசிரியர் பொன்னுசாமி தானாம். அவரும் மருத்துவர் இளங்கோவனும்ஒரே சமூகம் என்பதும். கொடுக்கல் வாங்கல் இருப்பதால் வேட்பாளர் திருச்சியில் தங்குவதற்கு பேராசியர் பொன்னுசாமி ஏற்பாடு செய்து கொடுத்தது மட்டுமே தற்போது தேமுதிக வேட்பாளருக்கு ஆறுதலான விசயம்.

தேர்தல் பிரச்சரம் இன்னும் ஆரம்பிக்காத நிலையில் முதல் கோணலே முற்றும் கோணலோ என்கிற தேமுதிக கட்சியினர் இடையே கேட்க முடிந்தது.

thiruchy dmdk admk shock Candidate
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe