Advertisment

கூட்டணிக் கட்சியான அதிமுகவின் ஊழலைக் கண்டித்த பா.ம.க.!

mmm

Advertisment

எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்ற போக்கில் ஆளும் அதிமுக அரசின் மீது பல ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு, எதிர்க்கட்சியான திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கண்டனம் தெரித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில், அதிமுகவின் தேசிய கூட்டணிக் கட்சியான பாஜக, விவசாயிகளின் (கிசான்) திட்டத்தில் பல ஆயிரம் கோடி ஊழலை வெளியே கொண்டுவந்து கண்டித்து, வரும் அதே வேளையில், மாநில கூட்டணிக்கட்சியான பா.ம.க வும் அதிமுக ஊழலைக் கண்டித்து கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தல்களிலும் தொடர்ந்த அதிமுக கூட்டணியில் உள்ள பா.ம.க. தற்போது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

கடந்த புதன் கிழமை, மாமல்லபுரம் மற்றும் அதன், சுற்று வட்டாரத்தில் பா.ம.க பேரூராட்சி சார்பில் அதிமுகவை விமர்சித்துக் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தது. அதில் சமீபத்தில் மாமல்லபுரத்தில், மீனவ பகுதியான மாமல்லபுரம் பேரூர் 10வது வார்டு மற்றும் ஒத்தவாடை தெருவான 11வது வார்டிலும் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. அந்த தார்ச்சாலை போட்டு சில நாட்களிலே தற்போது சேதமடைந்துள்ளது. இந்த தரமற்ற சாலை அமைக்க எழுபது லட்சம் ரூபாய் டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால் முற்றிலும் தரமற்ற சாலை அமைத்துள்ளதால் அதைக் கண்டித்து மாமல்லபுரம் பா.ம.க பேரூர் செயலாளர் ராஜசேகரன் சுவரொட்டி ஒட்டியுள்ளார்.

Alliance Party Poster Condemned pmk corruption aiadmk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe