“Alliance led by ADMK; There is no place for them

கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி, சசிகலா ஆகியோருக்கு இடம் கிடையாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Advertisment

இன்றுசெய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், “பாஜக தேசிய கட்சி; தோழமைக் கட்சி என்ற முறையில்தான் எங்கள் அணுகுமுறைஅமையும். கூட்டணியைப்பொறுத்தவரை அதிமுக தலைமையில்தான் அமையும். கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி, சசிகலா ஆகியோருக்கு இடம் கிடையாது. இதை ஈபிஎஸ் பலமுறை தெரிவித்துவிட்டார்.

Advertisment

ஆளுநர் அவரது பணியைச் செய்கிறார். பல்வேறு வகையான பிரச்சனைகள் குறித்துப்பேசுகிறார். முதல்வர் விருப்பப்படிதான் காங்கிரஸ் செயல்படுகிறது. செல்வப் பெருந்தகையைப் பொறுத்தவரை அவர் மேல் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளது. முதல்வர் ஸ்டாலின் ஏற்பாடுகளால் தான் செல்வப் பெருந்தகை காங்கிரஸ் சட்டமன்றத் தலைவரானார்.

செல்வப் பெருந்தகை காங்கிரஸ் கட்சியைப் பற்றிப் பேசமாட்டார். எங்களைப் பற்றித்தான் பேசுவார். முதல்வரின் ஊதுகுழல் அவர். செல்வப் பெருந்தகை காங்கிரசின் தலைவராக வேண்டும். அதற்கு என்ன வழியோ அதைச் செய்து கொண்டுள்ளார். இக்குற்றச்சாட்டை நாங்கள் சொல்லவில்லை. காங்கிரஸ் கட்சியின் ரஞ்சன்குமார் சொல்லுகிறார்.

கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும்போது எப்படிப் பொறுத்துக்கொள்ள முடியும். ஒட்டுமொத்தமாக திமுகவிற்காக ஓபிஎஸ் செயல்படும்போது எப்படி கட்சியில் வைத்துக்கொள்ள முடியும்” எனக் கூறினார்.