tamil isai soundararajan

Advertisment

கொடைக்கானலில் நடைபெற்று வரும் மருத்துவ கருத்தரங்கில் கலந்து கொள்ள தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெள்ளிக்கிழமை வருகை தந்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக தொண்டர்களை தயார்படுத்தி வருகிறோம். கட்சியின் தலைவர் அமித்ஷாவின் உத்தரவின்படி 20 சட்டமன்ற பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளனர். தமிழகத்தில் கூட்டணி குறித்து கவலைப்படவில்லை. இருப்பினும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கூட்டணி குறித்து பேசப்படும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். பா.ஜ.க. ஆட்சியில் மக்கள் நன்றாக உள்ளனர்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

Advertisment

தமிழக அரசு மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. ஆனால் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இணைந்து செயல்பட்ட தி.மு.க. எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. மத்திய அரசு கொண்டு வரும் ஆக்கப்பூர்வமான திட்டத்தினை குறை கூறுவதிலேயே குறியாக உள்ளனர். மோடி பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.

புதிதாக கட்சி தொடங்குபவர்கள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த மாட்டார்கள். தலைப்பு செய்தியாக வருபவர்கள் தலைவராக வர முடியாது. உலக அளவில் பொருளாதாரத்தில் பல நாடுகளை பின்னுக்குத்தள்ளி இந்தியா 6-வது இடத்தினை பிடித்து சாதனை புரிந்துள்ளது. மோடியை குறை சொல்பவர்கள் உலக அளவில் பெயர் கிடைத்தாலும் பாராட்டுவது இல்லை.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

தமிழகத்தில் பல திட்டங்கள் பாராட்டப்பட்டாலும் சில திட்டங்களை எச்சரிக்கையாக கையாளவேண்டும். பேரிடர் மேலாண்மை பயிற்சி மேற்கொண்ட லோகேஸ்வரி என்ற மாணவி உயிரிழந்தது ஒப்புக் கொள்ளக் கூடியதாக இல்லை. இதற்கு கல்லூரி நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும். முதலுதவி, ஆம்புலன்ஸ் வசதி இல்லாமல் நடத்தப்பட்ட இந்த பயிற்சி குறித்து விசாரிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.