‘இணைந்த இதயங்கள்..’ மதுரையை கலக்கும் அழகிரி போஸ்டர்..! 

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (07/05/2021) காலை 09.00 மணிக்கு நடைபெற்ற பதவியேற்பு விழாவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்குத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். மேலும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தொடர்ந்து, அவரது தலைமையிலான அமைச்சரவை அமைச்சர்களும் பதவியேற்றனர்.

மு.க. ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பதையொட்டிவாழ்த்து தெரிவித்து மு.க அழகிரியின் ஆதரவாளர்களால், ‘தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும்.’, ‘தம்பிக்கு வாழ்த்திய அண்ணனுக்கு நன்றி.’, ‘தம்பி வா தலைமை ஏற்கவா.’, ‘இணைந்த இதயங்களே அஞ்சா நெஞ்சரின் வாழ்த்துகளுடன் தம்பிகள்..’ என்பன போன்ற வாசகங்களுடன் மதுரை முழுக்க போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதேபோல், அழகிரியின் ஆதரவாளர்கள், இனிப்பு வழங்கி வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

alagiri mk stalin
இதையும் படியுங்கள்
Subscribe