Skip to main content

பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் - பொள்ளாச்சி ஜெயராமன்

Published on 27/08/2018 | Edited on 27/08/2018
pollachi jayaraman


 

 


பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.
 

அ.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் பொள்ளாச்சியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதாவது:–
 

அ.தி.மு.க.விற்கு பல்வேறு காலகட்டங்களில் சோதனைகள் நடைபெற்ற போதிலும், மீண்டும் எழுந்துள்ளது. சிலநேரங்களில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. என்றாலும் நிரந்தர தோல்வி கிடையாது. மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறுகையில், எனக்கு பிறகும் இந்த கட்சி 100 ஆண்டு காலம் இருக்கும். மக்களுக்காக பாடுபடும் என்றார். எங்களை நம்பி சொல்லவில்லை. உங்களை நம்பித்தான் அவர் கூறினார்.

 

 


எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆத்மா மனித தெய்வங்களாக இருந்து கட்சியை காத்து வருகின்றனர். மக்கள் துணையிருக்கும் வரை எந்தக்கொம்பனாலும் அ.தி.மு.க.வை அசைக்க முடியாது. இது ஏழைகளின் கட்சியாகும். அ.தி.மு.க.விலிருந்து ஒரு சிலர் பதவிக்காக வேறுகட்சிக்கு சென்றிருப்பார்கள். அவர்கள் தாயின் மடியில் இளைப்பார மீண்டும் வருவார்கள்.
 

வித்தை காட்டுபவர்களுக்கு கூட்டம் கூடும். அந்த கூட்டம் சில மணி நேரத்தில் கலைந்து விடும். உண்மையான தொண்டன் அ.தி.மு.க.வை விட்டு எங்கும் செல்ல மாட்டான். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ராமர் ஒரு அவதார புருஷன்; அவரை இப்படி சொல்லலாமா? - பொள்ளாச்சி ஜெயராமன் வருத்தம் 

Published on 12/01/2023 | Edited on 12/01/2023

 

pollachi jeyaraman talk about ramar issue th assembly

 

2023ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர், ஆளுநர் ரவி உரையுடன் 9ஆம் தேதி தொடங்கிய நிலையில் நான்காவது நாளான இன்று சேது சமுத்திரத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்றக் கோரி ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

 

சட்டப்பேரவையில் இந்தத் தீர்மானம் குறித்த விவாதத்தின் போது சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, “தமிழ்நாட்டு மக்களின் குறிப்பாகத் தென் தமிழ்நாட்டு மக்களின் நீண்ட காலக் கனவாக இருப்பது சேது சமுத்திரத் திட்டம். அதனை ராமர் பாலம் என்று சொல்லி மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளது. இதை மக்கள் நம்ப வேண்டும் என்று முயல்கிறது. கட்டுக்கதைகளும், கற்பனைகளும், நம்பிக்கைகளும் வரலாறு ஆகாது” எனப் பேசினார். 

 

இந்நிலையில் இது குறித்துப் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன், "100 கோடி மக்களுக்கு மேல் பின்பற்றுகிற ஒரு மதத்தின் நாயகன் ராமர். ஒரு நாளைக்கு பல முறை ராம ராமா என்று சொல்லுகிறோம். அப்படிப்பட்ட ராமரை கற்பனை கதாபாத்திரம் என்றும் கற்பனைக் கதைகள் என்றும் எப்படிச் சொல்வது. ராமர் ஒரு அவதார புருஷன். அவரைக் கதாபாத்திரம் என்று அவையில் பதிவு செய்தது எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கருத்தை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

ஈபிஎஸ் தலைமையிலான அதிமுகவின் அடுத்தடுத்த திட்டங்கள்..ஆலோசனை கூட்டத்தில் பரபரப்பு

Published on 10/10/2022 | Edited on 10/10/2022

 

EPS-led AIADMK's next plans

 

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் இருக்கக் கூடிய அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பின் நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், காமராஜ், தங்கமணி, பொன்னையன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

 

அதிமுக தற்போது இரு தரப்பாக இருக்கும் நிலையில் மொத்தம் இருக்கக்கூடிய 75 மாவட்ட செயலாளர்களில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ள 69 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். 61 பழனிசாமி சட்ட மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

அதிமுகவின் பொன்விழா ஆண்டினை முன்னிட்டு தமிழகம் எங்கும் பொதுக்கூட்டம் நடத்த இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும் 17ம் தேதி நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 

அதிமுகவின் துணை சட்டப்பேரவைத் தலைவராக இருந்த ஓபிஎஸ் மற்றும் துணை கொறடாவாக இருந்த மனோஜ் பாண்டியனையும் நீக்கி புதிய துணை சட்டப்பேரவை தலைவராக ஆர்.பி.உதயகுமாரையும் துணை கொறடாவாக  அக்ரி கிருஷ்ணமூர்த்தியையும் நியமித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு சட்டப்பேரவைக்கு கடிதம் வழங்கி இருந்தது. இது குறித்து சபாநாயகர் முடிவு ஏதும் எடுக்காத நிலையில் அது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது.