
இன்று சென்னையில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் குறித்த முடிவை கண்டித்து ஓ.பி.எஸ் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து சட்டமன்றத்தின் வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் தேனி மாவட்டம், போடி நகர் தேவர் சிலை அருகே ஓ.பி.எஸ் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து அதிமுக நகர செயலாளர் வி.ஆர் பழனிராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல் துறையினர் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் திருமண மண்ட பத்தில் தங்க வைத்தனர் இதனால் போடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)