வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் தமிழகத்தில் சூடு பிடித்திருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை,தொகுதிப் பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் என களத்தில் தீவிரமாகசெயலாற்றி வருகின்றன. அதேபோல் தேர்தல் ஆணையம்சார்பிலும்தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கான தீவிரஆலோசனைகள் சூடுபிடித்துள்ளன.
இந்நிலையில், பாஜககொள்ளைப்புறமாக ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, ''அரசியல் சமநிலையைச் சீர்குலைத்துகொள்ளைப்புறமாக ஆட்சியைப் பிடிக்க பாஜகமுயற்சிக்கிறது. தமிழகத்தில் பாஜகவிடமிருந்து அதிமுக தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முயற்சிக்க வேண்டும். மக்களைச் சந்தித்து ஆட்சிக்கு வரும் நேர்மை, திறம் இல்லாத கட்சி பாஜக'' எனத் தெரிவித்துள்ளார்.