ஜூலை 18ஆம் தேதி தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக சார்பில் 3 உறுப்பினர்களும், அதிமுக சார்பில் 3 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

Advertisment

ops-eps

திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சன் மற்றும் தொழிற்சங்கத்தில் சீனியரான சண்முகத்திற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள ஒரு இடம் கூட்டணிக் கட்சியில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு ஒதுக்கியுள்ளது திமுக.

Advertisment

அதிமுக தனக்கு உள்ள 3 இடங்களில் ஒன்றை பாமகவுக்கு கொடுக்கிறது. மீதமுள்ள இரண்டு இடங்களில் கட்சிக்குள் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி தம்பிதுரைக்கு வழங்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி சிபாரிசு செய்துள்ளார். கே.பி.முனுசாமிக்கு வழங்கலாம் என்று ஓ.பன்னீர்செல்வம் சிபாரிசு செய்துள்ளார். மைத்ரேயனுக்கு வாய்ப்பு வழங்குமாறு பாஜக மூத்த தலைவர்கள் அதிமுகவுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். ராஜ்யசபா பதவிக்கு கட்சிக்குள்ளும், டெல்லி மேலிடத்தில் இருந்தும் நெருக்கடி கொடுப்பதால் யாரை தேர்வு செய்வது என்று குழப்பத்தில் உள்ளது அதிமுக தலைமை.