Skip to main content

அதிமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் - கடும் போக்குவரத்து நெரிசல் - சிக்கி தவித்த ஆம்புலன்ஸ் (படங்கள்)

Published on 25/03/2019 | Edited on 25/03/2019

 

17வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தலைமைத்தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது. 

 

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக ராஜேஷ் போட்டியிடுகிறார். இன்று அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வியாசர்பாடியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அமைச்சர் ஜெயக்குமார், அவைத் தலைவர் மதுசூதனன், கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த தேமுதிக பாராளுமன்றத் தொகுதி வேட்பாளர் மோகன்ராஜ், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன் ஆகியோர் உடனிருநதனர். 

 

முன்னதாக வியாசர்பாடி சர்மா நகர் தெருவில் கூட்டணிக் கட்சிகள் மற்றும் அதிமுக தொண்டர்களுடன் வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று இந்த போக்குவரத்து நெரிசயலில் சிக்கி நகர முடியாமல் தவித்தது.

 

 

சார்ந்த செய்திகள்