Skip to main content

சூழ்ச்சியும், தந்திரமும் தெரியாத OPS..! கட்சி நிர்வாகி பேச்சு..! வியந்து பார்த்த EPS..!

Published on 19/09/2020 | Edited on 19/09/2020

 

 

அ.தி.மு.க.வின் அவசர உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் 18.09.2020 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் உயர்மட்ட குழு நிர்வாகிகள், அமைச்சர்கள் பங்கேற்றனர்.

 

கூட்டத்தில் கே.பி.முனுசாமி, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ்பாண்டியன். தங்கமணி உள்ளிட்ட நிர்வாககிள் பேசினர். உடனடியாக அந்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைக்கவேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார். பின்னர் பேசிய எடப்பாடி பழனிசாமி, இப்போதைய நிலையில் அந்த குழுவை அமைக்க முடியாது என்று பேசினார். இதேபோல் தொடர்ந்து நிர்வாகிகள் பேசினார்கள். 

 

ஜே.சி.டி.பிரபாகர் பேசுகையில், கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டவர்கள் பலர் அதிருப்தியில் இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் இதேநிலை இருக்கிறது. இந்த நிலையில் அடிக்கடி தலைமை அலுவலகம் வந்து நிர்வாகிகள்-தொண்டர்களை சந்திக்க போகிறேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.

 

எனவே அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளையும் அழைத்து பேசுங்கள். ஏனென்றால் பலர் குமுறலுடன் இருக்கிறார்கள். அவர்களை அழைத்து பேசவேண்டும். கட்சியில் சூழ்ச்சியும், தந்திரமும் தெரியாத ஓ.பன்னீர்செல்வத்தை யாரும் எக்காரணம் கொண்டும் வருத்தப்பட வைக்காதீர்கள். அவருக்கு சந்தோஷம் தரும் நடவடிக்கையில் மட்டும் ஈடுபடுங்கள் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஈபிஎஸ் தலைமையிலான அதிமுகவின் அடுத்தடுத்த திட்டங்கள்..ஆலோசனை கூட்டத்தில் பரபரப்பு

Published on 10/10/2022 | Edited on 10/10/2022

 

EPS-led AIADMK's next plans

 

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் இருக்கக் கூடிய அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பின் நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், காமராஜ், தங்கமணி, பொன்னையன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

 

அதிமுக தற்போது இரு தரப்பாக இருக்கும் நிலையில் மொத்தம் இருக்கக்கூடிய 75 மாவட்ட செயலாளர்களில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ள 69 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். 61 பழனிசாமி சட்ட மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

அதிமுகவின் பொன்விழா ஆண்டினை முன்னிட்டு தமிழகம் எங்கும் பொதுக்கூட்டம் நடத்த இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும் 17ம் தேதி நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 

அதிமுகவின் துணை சட்டப்பேரவைத் தலைவராக இருந்த ஓபிஎஸ் மற்றும் துணை கொறடாவாக இருந்த மனோஜ் பாண்டியனையும் நீக்கி புதிய துணை சட்டப்பேரவை தலைவராக ஆர்.பி.உதயகுமாரையும் துணை கொறடாவாக  அக்ரி கிருஷ்ணமூர்த்தியையும் நியமித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு சட்டப்பேரவைக்கு கடிதம் வழங்கி இருந்தது. இது குறித்து சபாநாயகர் முடிவு ஏதும் எடுக்காத நிலையில் அது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது. 

 

Next Story

ஓபிஎஸ்-இபிஎஸ் மோதல் முற்றுகிறது! ஆர்ப்பாட்டத்தை புறக்கணித்த ஓபிஎஸ் ! 

Published on 28/02/2022 | Edited on 28/02/2022

 

The OBS-EPS conflict is over! OBS boycotts demonstration

 

ஜெயலலிதா பிறந்த நாளின் போது, சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கடந்த 24-ந் தேதி சந்தித்துப் பேசினார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த சந்திப்பிற்கு ஓ.பி.எஸ்சை அழைத்துச் செல்லவில்லை. ஓ.பி.எஸ்சிடம் சொல்ல கூட இல்லை எடப்பாடி. இத்தனைக்கும், ஓ.பி.எஸ். கேட்டும் ஜெயக்குமாரைச் சந்திக்க செல்வது பற்றி மூச்சு விடவில்லை இ.பி.எஸ். 

 

இந்த விசயமறிந்து, ஏகத்துக்கும் கோபமான ஓ.பி.எஸ், "இனியும் பொறுப்பதற்கில்லை" என்று ஆவேசப்பட்டார். இந்த செய்தியை முதன் முதலில் நக்கீரன் இணையதளத்தில் நாம் தான் பதிவு செய்தோம். அந்த செய்தியின் இறுதியில், ஜெயக்குமாரை சந்திக்க ஓ.பி.எஸ். திட்டமிட்டுள்ளார் என்பதையும் குறிப்பிட்டிருக்கிறோம். 

 

இந்த நிலையில், ஜெயக்குமார் கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், அதனை புறக்கணித்து விட்டு, தனது நட்பில் இருக்கும் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோருடன் புழல் சிறைக்கு சென்று ஜெயக்குமாரை சந்தித்திருக்கிறார் ஓ.பி.எஸ்.

 

அந்த சந்திப்பில், "நீங்கள் கலங்காதீர்கள். உங்களுக்கு பக்கபலமாக நாங்கள் இருப்போம். எடப்பாடி பழனிச்சாமி என்னிடம் சொல்லாமலே உங்களை சந்திக்க வந்துவிட்டார்" என்று சொல்லி, ஜெயக்குமாருக்கு தெம்பூட்டியிருக்கிறார் ஓ.பி.எஸ். மற்றவர்களும் ஜெயக்குமாருக்கு நம்பிக்கையாக பேசியுள்ளனர். 

 

சந்திப்பு முடிந்து வெளியே வந்த ஓபிஎஸ், "அதிமுக இன்று நடத்தும் ஆர்ப்பாட்டம் என்னிடம் கேட்காமலே முடிவு எடுக்கப்பட்டது" என்று குற்றம்சாட்டியுள்ளார். உள்ளாட்சி தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, ஓபிஎஸ்-இபிஎஸ் மோதல் முற்றத் துவங்கியுள்ளது. இந்த மோதலில் சமாதானம் இருக்கப் போவதில்லை என்கிறார்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.