/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/892_3.jpg)
பாஜக தலைவர் அண்ணாமலை மீது ஓபிஎஸ் தரப்பினர் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்
அதிமுக ஓபிஎஸ் தரப்பு சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிவகங்கை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் அதிமுக ஓபிஎஸ் தரப்பின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் கலந்துகொண்டார். விழாவில் பேசிய அவர் அதிமுக - பாஜக உறவில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “ஓபிஎஸ், இரட்டை இலை முடக்கப்படுவதற்கு காரணமாக இருக்கக்கூடாது என கருதி உச்சநீதிமன்றத்தில் முறையிடாமல் ஒதுங்கியுள்ளார். வேட்பாளர் தேர்வில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. பாஜக தேர்தலில் போட்டியிட்டால் ஓபிஎஸ் பாஜகவை ஆதரிப்போம் என சொன்னார். அதற்கு காரணம் இருக்கிறது. பாஜக போட்டியிட்டால் இபிஎஸ் அவர்களை ஆதரிப்பார். டிடிவியும் அவர்களை ஆதரிப்பார். ஈரோடு கிழக்கில் போட்டியிடுவது காங்கிரஸ். எனவே பாஜக எதிர்த்து போட்டியிட்டால் 2024 தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும் என்பதை கருதியே அவ்வாறு சொன்னார்.
அதிமுகவிற்கு இடையே ஏற்பட்டுள்ள பிளவில் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த பாஜக உளமார முயற்சி செய்கிறது. பாஜகவின் அந்த எண்ணத்தை நாங்கள் உளமார வரவேற்கிறோம். ஆனால் தமிழ்நாட்டு பாஜகவின் தலைவராக இருக்கும் அண்ணாமலை தொடர்ந்து ஒருதலை பட்சமாகநடந்து கொண்டு பாஜகவோடு எங்களுக்கு இருக்கும் நல்லுறவில் விஷம் கலப்பதற்கு முயல்கிறார். அச்செயலின்மீதுஎங்களுக்கு இருக்கும் வருத்தத்தை நாங்கள் தீர்மானமாக இயற்றி இருக்கிறோம்” எனக் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)