Published on 03/05/2021 | Edited on 03/05/2021

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெற்றது. முதலமைச்சர் வேட்பாளர்களாக ஐந்து பேர் களத்தில் இருந்தனர். இதில் எடப்பாடி பழனிசாமியும், மு.க.ஸ்டாலினும்தான் அமோக வெற்றி பெற்றனர். திமுக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றியது. திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு எடப்பாடி பழனிசாமி அனுப்பிய ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், தற்பொழுது அதிமுக சார்பில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏக்கள் உடனான கூட்டம் வரும் 7 தேதி நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையில் வரும் 7 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு எம்.எல்.ஏக்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.