Advertisment

காவிரிக்காக நடந்த கட்சி பொதுக்கூட்டத்தை புறக்கணித்த அ.தி.மு.க எம்.பி, எம்.எல்.ஏக்கள்!  

kpm

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் படி காவேரி மேலாண்மை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி அ.தி.மு.க சார்பில் கடலூரில் பொதுக்கூட்டம் நடத்த அறிவிப்பு செய்யப்பட்டது.

ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட கட்சி சார்பில் நடக்கும் கடலூர் பொதுக்கூட்டத்துக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமை தாங்குவார் என்றும் அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனிசாமி அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் கூட்டத்தில் சிறப்புரையாற்றுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

Advertisment

அதேசமயம் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் காட்டுமன்னார்குடியில் மாநில அமைப்பு செயலாளரும், எம்.எல்.ஏவுமான முருகுமாறன் தலைமையில் பொதுக்கூட்டம் நடக்கும் என்றும், அக்கூட்டத்திலும் முனுசாமி மற்றும் சண்முகம் பங்கேற்பார்கள் எனவும் இன்னொரு பக்கம் அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்று மதியத்துக்கு மேல் காட்டுமன்னார்குடி கூட்டம் ரத்து செய்யப்படுவதாக திடீரென அறிவிக்கப்பட்டது.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

ஆனாலும் கடலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மாவட்டத்தின் எம்.பிக்களான கடலூர் அருண்மொழித்தேவன், சிதம்பரம் சந்திரகாசி, எம்.எல்.ஏக்கள் பண்ருட்டி சத்யா பன்னீர்செல்வம், காட்டுமன்னார்குடி முருகுமாறன், சிதம்பரம் பாண்டியன் ஆகியோர் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

தொடர்ந்து அமைச்சர் சம்பத் பங்கேற்கும் அரசு,பொது நிகழ்ச்சிகளை புறக்கணித்து வரும் இவர்கள் கட்சி நிகழ்ச்சியை, அதுவும் தலைமை அறிவித்த, கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றுள்ள பொதுக்கூட்டத்தை, தமிழரின் வாழ்வாதார பிரச்சனையான காவிரிக்காக நடக்கின்ற கூட்டத்தில் கூட ஒரே கட்சியில் உள்ளவர்கள் ஒற்றுமையாக பங்கேற்காத இவர்கள் எப்படி காவிரி மேலாண்மை அமைக்க எப்படி அழுத்தம் கொடுப்பார்கள் என்கிற கேள்வி பொதுமக்களிடமும், அ.தி.முக தொண்டர்களிடமும் எழுந்துள்ளது.

aiadmk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe