Advertisment

ஓபிஎஸக்கு ஆதரவு தெரிவித்த எடப்பாடி ஆதரவு எம்எல்ஏ!

AIADMK MLA who supported OPS

எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூட்டிய பொதுக்குழுவைச் செல்லாது என அறிவிக்கக் கோரி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையில் இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் இன்று எழுத்துப்பூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்ய இருதரப்புக்கும் உத்தரவிட்டு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளனர்.

Advertisment

நேற்று சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் விடுதியில் ஓபிஎஸ் அவரது ஆதரவாளர்கள் மேற்கொண்ட ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட திரைப்பட இயக்குனர் பாக்யராஜ் ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவில் இணைத்திருந்தார். இந்நிலையில் எடப்பாடி அணியை ஆதரித்து வந்த உசிலம்பட்டி அதிமுக சட்டமன்றஉறுப்பினர் ஐயப்பன் தற்பொழுது ஓபிஎஸ் உடன் ஆலோசனை மேற்கொண்டு வந்த நிலையில் அவர் தற்பொழுது ஓபிஎஸ் அணியை ஆதரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisment

admk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe