Skip to main content

அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு திடீர் நெஞ்சுவலி 

Published on 10/02/2020 | Edited on 10/02/2020
R. Kumaraguru -



விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அதிமுக எம்எல்ஏவாகவும், அக்கட்சியின் மாவட்டச் செயலாளராகவும் இருப்பவர் குமரகுரு. இவருக்கு இன்று அதிகாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குமரகுருவை சிகிச்சைக்காக அவசரமாக அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்துள்ளனர்.
 

இதையடுத்து குமருகுரு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடுத்தடுத்து நிகழ்ந்த விபத்து; 2 பேர் பலியான சோகம்

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
A subsequent incident; Tragedy with 2 peoples

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் சிப்காட் எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது லாரியின் வேகத்தை டிரைவர் திடீரென குறைத்ததாக கூறப்படுகிறது. அதே சமயம் திண்டுக்கல்லில் இருந்து சென்னையை நோக்கி லாரிக்கு பின்னால் வந்த கார் லாரியின் பின்பக்கம் மோதியுள்ளது. இந்த சூழலில் திருச்சியில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்து காரின் மீது மோதியது.

இதனால் விபத்தில் சிக்கிய பேருந்து சாலையின் ஓரத்தில் இருந்து சுமார் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த சம்பவத்தில் காரில் பயணம் செய்த தாய் மற்றும் மகள் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இவர்கள் இருவரின் உடல்களும் உடற்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மேலும் பேருந்தில் பயணித்த 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இடைக்கல் போலீசார் இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து சம்பவத்தால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. லாரி மீது கார் மற்றும் பேருந்து அடுத்தடுத்து மோதிய விபத்தில் தாய் மற்றும் மகன் என 2 பேர் பலியான சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

'கியர் மாற்ற தெரியலங்க' - நடுரோட்டில் நிறுத்திய தற்காலிக பேருந்து ஓட்டுநர்

Published on 09/01/2024 | Edited on 09/01/2024
'Gear change therialanga' - temporary bus driver stopped in the middle of the road

தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்த வேலைநிறுத்தம் நள்ளிரவில் இருந்து தொடங்கி உள்ளது. இருப்பினும் சென்னையில் வழக்கம்போல் மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதே போன்று தமிழகத்தின் விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம், மதுரை திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் இருந்தும் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் சில இடங்களில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும் திமுக தொழிற்சங்க தொழிலாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சில இடங்களில் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்பட்டதால் பேருந்துகள் நிரம்பி வழியும் சூழல் ஏற்பட்டது.

பல இடங்களில் தற்காலிக ஓட்டுநர்களை பயன்படுத்தி பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் தற்காலிக பேருந்து ஓட்டுநர் தன்னால் பேருந்தை இயக்க முடியவில்லை என பாதி வழியில் நிறுத்திவிட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

உளுந்தூர்பேட்டையில் இருந்து விருத்தாசலம் செல்லும் 16E என்ற பேருந்து பணிமனையில் இருந்து தற்காலிக ஓட்டுநர் ஒருவரால் எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால், குறிப்பிட்டு தூரத்திலேயே பேருந்து நிறுத்தப்பட்டது. இது குறித்து அறிந்த அதிகாரிகள் அங்கு சென்று தற்காலிக ஓட்டுநரிடம் கேட்டதற்கு தான் மினி டெம்போ ஓட்டி வந்ததாகவும், தன்னால் பேருந்தை ஓட்ட முடியவில்லை. வளைவில் செல்லும் போது கியர் மாற்ற தெரியவில்லை என கூறியதாக கூறப்படுகிறது. இதனால் வேறு நபரை வைத்து பேருந்து பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.