AIADMK ministers are winning in corruption

Advertisment

நேற்று (24.03.2021) பெரம்பலூர், குன்னம் தொகுதியில் திமுக வேட்பாளர் சிவசங்கரை ஆதரித்து கனிமொழி எம்.பி. பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது, “அதிமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் முதல்வர் சாபம் விட துவங்கியுள்ளார்.

தமிழகத்தில், பாஜக செய்யும் ஒரே விஷயம் பெரியார் சிலைகளை அவமதிப்பது மட்டுமே. தமிழகம் வெற்றிநடை போடவில்லை, முதல்வரே வெற்றிநடை போடுகிறார். அதிமுக அமைச்சர்கள் ஊழலில் வெற்றிநடை போடுகின்றனர். கரோனா தடுப்பு உபகரணங்கள் வாங்கியதில் கூட ஊழல் நடந்துள்ளது. பஞ்சாயத்துகளில் பல்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளது. 1,300 ரூபாய்க்கு வாங்க வேண்டிய எல்.இ.டி பல்பை 6,500 ரூபாய்க்கு வாங்கியதாக கணக்கு எழுதி, முறைகேடு செய்துள்ளனர். தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது” என்று பிரச்சாரத்தில் பேசினார்.