AIADMK Jayakumar slams DMK

Advertisment

திமுகவிற்கு உடன்பட்டால் ஆளுநர் தேவை; உடன்படவில்லை என்றால் ஆளுநர் தேவை இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சரும் இபிஎஸ் ஆதரவாளருமான ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அதிமுக சார்பில் சென்னை பாரிமுனையில் மக்களுக்கு பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார். இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “2024 பாராளுமன்றத்தேர்தலோடு சட்டமன்றத்தேர்தலும் நடந்தால் தமிழர்கள் அத்தனை பேருக்கும் பொங்கல் விழாவாக இருக்கும்.

தமிழகம் முழுமைக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் மகிழ்ச்சி என்றால் திமுகவிற்கு மட்டும் வயிற்றில் புளியைக் கரைக்கும் செயல். ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அதிமுக கடிதம் அனுப்பியுள்ளது. அதில் என்ன எழுதியுள்ளது என்பதெல்லாம் தெரியாது.

Advertisment

திமுகவிற்கு உடன்பட்டால் ஆளுநர் தேவை. உடன்படவில்லை என்றால் ஆளுநர் தேவை இல்லை. முதலமைச்சர் மகன் பதவிப்பிரமாணத்திற்கு யார் தேவை. அப்பொழுது ஆளுநர் தேவை. இபிஎஸ் ஆட்சிக்காலத்தில் சட்டமன்றத்தில் நாற்காலிகளைத்தூக்கிப் போட்டு மைக்கை உடைத்தனர். சட்டமன்றத்தை கேவலப்படுத்தினர். அப்போது ஆட்சியை நீக்க வேண்டும் என ஆளுநரிடம் சென்றனர். அப்போது அவர்களுக்கு ஆளுநர் வேண்டும்” எனக் கூறினார்.