சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை அக்கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/aiadmk 31.jpg)
அதிமுக தென் சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் கடந்த 5ஆம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ள நிர்வாகிகளுக்கு பதவி வழங்கப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் பி.சத்யா பணம் வாங்கிக் கொண்டு பல பணிகளுக்கு ஆட்களை நியமனம் செய்ததாக கூறி ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம், அண்ணா நகர், டி.நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் இன்று காலை அதிமுக தலைமை அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Follow Us