கோகுல இந்திராவுக்குத்தான் அந்த பதவியா? அதிர்ச்சியில் வளர்மதி!

அதிமுகவில் உள்ள முக்கிய விஐபிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஏற்கனவே நடைபெற்ற சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்கள், நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள், மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவர்களில் பலருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த நிலையில் நகராட்சி மற்றும் மாநகராட்சி பதவிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றால் மேயர் பதவிகளை குறிவைத்து முதல்வர் ஈ.பி.எஸ்.ஸை சந்திக்கும்போது பேசி வருகின்றனர்.

gokula indira - valarmathi

இந்த நிலையில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் 25 தேதி அதிமுக நடத்தியது. முக்கிய நிர்வாகிகளுக்கு ஒதுக்கப்பட்டு அந்ததந்த பகுதியில் நடத்தப்பட்டது. தென்சென்னை வடக்கு மாவட்டத்தில் எம்.எம்.டி. நகரில் நடைபெற்ற வீரவணக்கம் கூட்டத்தில் கலந்து கொண்டார் முதல்வர் ஈ.பி.எஸ். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட கோகுல இந்திரா, முதல்வரைசந்தித்துப் பேசியுள்ளார்.

கட்சியில் மகளிரணி செயலாளர் பதவியை பெற வேண்டும் என்றும், மேயர் பதவிக்கு போட்டியிட வேண்டும் என்றும் கோகுல இந்திரா காத்திருக்கும் நிலையில் இப்படி ஒரு சந்திப்பு நடந்துள்ளதை அறிந்த வளர்மதி, எங்கு கோகுல இந்திராவுக்குத்தான் அந்த பதவி போய்விடுமா என்ற அதிர்ச்சியில் உள்ளாராம்.

aiadmk Gokula Indira valarmathi
இதையும் படியுங்கள்
Subscribe