ADVERTISEMENT

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா-பொன்விழா ஆண்டு கல்வெட்டு சர்ச்சை!

09:44 AM Oct 17, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதிமுக தொடங்கப்பட்டு 50வது ஆண்டு பொன்விழா இன்று கொண்டாடப்படவிருக்கிறது. அதற்காக அதிமுகவினர் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். தற்போதைய அதிமுக தலைமையில் இருக்கும் பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தரப்பிலும் விழா கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொன்விழா மலரையும் இன்று வெளியிட இருக்கின்றனர். அதேபோல் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு 'எம்ஜிஆர் மாளிகை' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தி.நகரில் உள்ள எம்ஜிஆர் ஜானகி மாளிகையில் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில் சசிகலா கலந்துகொண்டு கட்சிக் கொடி ஏற்ற இருக்கிறார். கட்சிக் கொடியை ஏற்றிவிட்டு கல்வெட்டு ஒன்றையும் திறந்து வைக்க இருக்கிறார் சசிகலா. அந்த கல்வெட்டில் 'அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா' என்று பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிமுக தரப்பில், அதிமுகவின் கொடியை சசிகலா பயன்படுத்துவது சட்டத்திற்கு விரோதமானது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்து வரும் நிலையில் தற்பொழுது இந்த கல்வெட்டு மேலும் ஒரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT