eps

வெளிநாடு சுற்றுப்பயணம் முடிந்து சென்னை திரும்பிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்து என்ன முக்கியமான வேலை என்று விசாரித்தோம். கட்சியின் பொதுக்குழுவை கூட்ட எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisment

Advertisment

ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஆண்டுக்கொரு முறை பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தன் விதிமுறை. இதன்படி வழக்கமாக டிசம்பரில் கூட்டும் பொதுக்குழுவை மார்ச்சுக்குள் கூட்டுவதாகத் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்திருந்தது அதிமுக தலைமை. இடையில் நாடாளுமன்றத் தேர்தல் குறிக்கிட்டததால் பொதுக்குழு கூட்டம் கூட்டப்படவில்லை.

இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையத்திடம் இருந்து அறிவுறுத்தல் வந்திருப்பதால் தன்னுடைய அமைச்சர்கள் சகாக்களுடன் கலந்து பேசியுள்ளார். விரைவில் பொதுக்குழுவை கூட்டுவதற்கான தேதியை முடிவு செய்ய எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளாராம். கட்சிக்குள் ஒன்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கை வலுத்திருப்பதால் மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கி அந்த நாற்காலியில் உட்காரவும் அவர் வியூகம் வைத்திருக்கிறாராம்.