அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று சென்னையை அடுத்துள்ள வானகரத்தில் அமைந்திருக்கும் தனியார் திருமண மண்டபத்தில் நடக்கிறது. இதற்காக காலை முதலே அதிமுக தொண்டர்கள் அந்த மண்டபத்தின் வெளியே குவியத்தொடங்கினர். அதன்பிறகு முக்கிய நிர்வாகிகள் உட்பட பொதுக்குழு உறுப்பினர்கள் வருகை தந்தனர். அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ் காலை 10.30 மணி அளவில் திருமண மண்டபத்திற்கு வந்தார். முன்னதாக ஒ.பி.எஸ் வருகைக்கு முன்பாகவே பூந்தமல்லி சாலையில் கடுமையான நெரிசல் ஏற்பட்டதால் ஓ.பி.எஸ் மாற்று பாதையில் பொதுக்குழு கூட்டத்திற்கு வந்தார்.அதன்பிறகு இ.பி.எஸ். சுமார் 11.15 மணிக்கு வந்தார்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் (படங்கள்)
Advertisment