Advertisment

திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் எம்.பி.

R. Lakshmanan

திமுகவில் உள்ள அதிருப்தியாளர்களை அதிமுக, பாஜக கட்சிகள் இழுத்து வரும் நிலையில், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளை திமுகவும் இழுத்து வருகிறது.அந்த வகையில்,அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், விழுப்புரம் வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளரும், மருத்துவ அணி முன்னாள் செயலாளருமான டாக்டர் இரா.இலட்சுமணன், தி.மு.வில் இணைந்தார்.

Advertisment

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இன்று (18-8-2020), காலை அண்ணா அறிவாலயத்தில் இந்த இணைப்பு நிகழ்வு நடந்தது.

Advertisment

டாக்டர் இரா.லட்சுமணனுடன் அ.தி.மு.க.வைச் சேர்ந்த கோலியனூர் ஒன்றிய முன்னாள் செயலாளர் ஆர்.குப்புசாமி, வானூர் தொகுதி செயலாளர் வி.எம்.ஆர்.சிவா, மாவட்ட மாணவர் அணி முன்னாள் செயலாளர் இராம.சரவணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஆர்.மணவாளன், மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் எம்.என்.முருகன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணைச் செயலாளர் எம்.என்.ஏழுமலை, கோலியனூர் ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்ற இணைச் செயலாளர் என்.ஆர்.மணி, வழக்கறிஞர் இராம்.இரமேஷ், மாவட்ட பிரதிநிதி மைலம் எஸ்.வெங்கடேசன், காணை ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினர் பொன்.குமார், வானூர் ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் டி.கே.குமார் (எ) லட்சுமணசாமி ஆகியோரும் தி.மு.க.வில் இணைந்தனர்.

திமுக பொருளாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் க.பொன்முடி, எம்.எல்.ஏ., கள்ளக்குறிச்சி நாடாமன்ற உறுப்பினர் பொன்.கௌதம் சிகாமணி மற்றும் விழுப்புரம் மத்திய மாவட்டக் கழக நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

admk ADMK FORMER MP join
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe