admk

Advertisment

தமிழகத்தில் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர் நேர்காணல்,தொகுதிப் பங்கீடு என பரபரப்பாக இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று (04.03.2021) அதிமுகவில் விருப்ப மனுஅளித்தவர்களிடம் ஒரே நாளில் அதிமுக தலைமை நேர்காணல் மேற்கொண்டது. இந்நிலையில் இன்று காலை முதல்அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஓபிஎஸ் - இபிஎஸ் ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

AIADMK first phase candidate list released!

இன்று அதிமுக சார்பில்முதற்கட்டவேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் என்ற தகவல் வெளியாகியிருந்த நிலையில், முதற்கட்டமாக 6 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் போடிநாயக்கனுர் - ஓபிஎஸ், எடப்பாடி - எடப்பாடி பழனிசாமி, விழுப்புரம் - சி.வி.சண்முகம்,ராயபுரம் - ஜெயக்குமார், ஸ்ரீவைகுண்டம் - எஸ்.பி.சண்முகநாதன், நிலக்கோட்டை - தேன்மொழி என பட்டியல் வெளியாகியுள்ளது.