Advertisment

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு... தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ கைது

nagercoil - kanyakumari

நாகா்கோவில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசனுக்கும் கோட்டார் பகுதியைச் சோ்ந்த ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருக்கிறதாம். இவா் அந்த பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி செல்லும்போது அந்தப் பெண்ணின் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்தஅந்த சிறுமியின் தாயார்கூட நாஞ்சில் முருகேசனை கண்டிக்கவில்லையாம். இதனால் அந்தச் சிறுமி அவள் காதலிக்கும் வாலிபனிடம் சொல்லியதையடுத்து அந்த சிறுமியும், வாலிபனும் வீட்டை விட்டு ஓடி விட்டனர்.

Advertisment

இதையடுத்து மகளைக் காணாத தாயார் போலீசில் புகார் கொடுத்ததன் அடிப்படியில், போலீசார் தேடி வந்த நிலையில் அந்தசிறுமியும் வாலிபனும் போலீசில் சரணடைந்தனா். அப்போது அந்தசிறுமி போலீசாரிடம் அம்மாவைசந்திக்க வரும் நாஞ்சில் முருகேசன் தனக்குபாலியல் தொல்லை தந்ததைசகித்துக் கொள்ள முடியாததால்தான் அந்த வாலிபனுடன் ஓடியதாக கூறியுள்ளார்.

Advertisment

இதனையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகளின் புகாரின் பேரில் போலீசார் நாஞ்சில் முருகேசன் மீது போக்ஸோ பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில்தான் அதிமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதும் தலைமறைவானார் நாஞ்சில் முருகேசன். இதையடுத்து அவரை பிடிக்க இரண்டு தனிப்படை போலீசார் அமைக்கபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி தேடப்பட்டு வந்த நிலையில், நாஞ்சில் முருகேசன் நெல்லை மாவட்டம் உவரியில் சிக்கினார்.

Nagercoil
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe