Advertisment

அதிமுக அவசர செயற்குழு கூட்டம் துவங்கியது

AIADMK emergency working committee meeting started

அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

Advertisment

முன்னதாக இந்த செயற்குழு கூட்டம் கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட பின் மீண்டும் தேதி மாற்றப்பட்டு ஏப்ரல் 16ல் (இன்று) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், பிற மாநிலச்செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் என கட்சியில் பொறுப்பில் இருப்பவர்கள் அனைவருக்கும் அழைப்பு வழங்கப்பட்டு தற்போது ஏறத்தாழ அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.

Advertisment

கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் 5-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக போட்டியிட மும்முரம் காட்டுவதால், எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்தும் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்தும் விவாதிக்கப்பட இருப்பதாக தெரிகிறது. மேலும் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

admk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe