மறைந்த முதல்வர்ஜெயலலிதாவுக்குப்பின் பல்வேறுசட்டப் போராட்டங்கள்நடத்தி அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகியுள்ள எடப்பாடி பழனிசாமி இன்று தனது 69வதுபிறந்தநாளைக்கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளைஅதிமுகவினர்பல்வேறு இடங்களில் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு கட்சியின் தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதில் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.