Skip to main content

அதிமுக வேட்பாளர் பட்டியல் மாறுதலுக்கு உள்ளாகும்! - ஓரவஞ்சனையால் ஓ.பி.எஸ். காட்டம்!

Published on 11/03/2021 | Edited on 11/03/2021

 

 

AIADMK candidate list is subject to change

 

அதிமுக வேட்பாளர் அறிவிப்பில், ஓ.பி.எஸ். கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், வேட்புமனு தாக்கலுக்கு முன்பாக, தற்போதைய வேட்பாளர் பட்டியல் மாறுதலுக்கு உள்ளாகும் என்றும், ஆளும்கட்சி வட்டாரம் கிசுகிசுக்கிறது. ‘வேட்பாளர்கள் அறிவிப்புதானே! தாராளமாக உங்கள் இஷ்டப்படி அறிவித்துக்கொள்ளுங்கள்! ரப்பர் ஸ்டாம்ப்தானே..  வைத்துக்கொள்ளுங்கள்! ஏ பாரம், பி பாரத்தில் கையெழுத்துக்காக என்னிடத்தில் வந்துதானே ஆக வேண்டும்’ என்ற உஷ்ணமான மனநிலையில், இரண்டு நாட்கள் சரியான தூக்கமும் இல்லாமல், கட்சி அலுவலகத்தில் கலவரப்பட்ட முகத்தோடு காணப்பட்ட ஓ.பி.எஸ்., ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து ஒருமையில் கூட பேசிவிட்டாராம்.   

 

எடப்பாடி பழனிசாமி – பன்னீர்செல்வம் ‘பனிப்போர்’ குறித்த அக்கட்சியினரின் ஆதங்கம் இதோ, ‘கட்சி நன்றாக இருக்க வேண்டும்; அனைத்து சமுதாயத்தினரிடமும் இணக்கமாகப் போகவேண்டும்’ என்பது ஓ.பி.எஸ்.ஸின் நிலைப்பாடு என்றால், ‘நான் முதலமைச்சராக இருக்க வேண்டும். இல்லையென்றால், ஆட்சியும் இருக்கக்கூடாது; கட்சியும் இருக்கக்கூடாது’ என்பது எடப்பாடி பழனிசாமியின் திட்டமாக இருக்கிறது. ஏற்கனவே, உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவிப்பு வெளியானதில்,  வெள்ளாளர்களுக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ள நிலையில், வன்னியர் இடஒதுக்கீட்டில், எடப்பாடி பழனிசாமி இத்தனை அவசரம் காட்டியிருக்க வேண்டியதில்லை. பா.ம.க.வுக்கு சாதகமாக நடந்து, வட மாவட்டங்களில், அதிமுக கூட்டணி வாக்கு வங்கியைப் பலப்படுத்தியதில், எடப்பாடி பழனிசாமியின் சுயநலம் அப்பட்டமாகத் தெரிகிறது. இந்த அக்கறையை தென்மாவட்டங்களில் அவர் வெளிப்படுத்தவில்லை. 

 

AIADMK candidate list is subject to change

 

சசிகலாவை பிடிவாதமாக கட்சியிலிருந்து ஒதுக்கி, முக்குலத்தோர் வாக்கு வங்கியை சிதைத்து, அந்த வாக்குகளை திமுக மற்றும் அமமுகவிடம் கொண்டுபோய்ச் சேர்த்தது, தேமுதிகவை திட்டமிட்டே கூட்டணியிலிருந்து கழற்றிவிட்டது, சீர்மரபினரின் கடும் எதிர்ப்பு என தேனி திண்டுக்கல், ராம்நாட், பிறமலைக்கள்ளர், ஈசநாட்டுக்கள்ளர் முக்குலத்தோர் பெல்ட் ஆகியவை போச்சு. எடப்பாடி பழனிசாமி வேலை, ஓபிஎஸ் உட்பட முக்குலத்தோர் யாரும் மீண்டும் முதலமைச்சராக வந்துவிடக்கூடாது. எல்லாரும் ஜெயிச்சு ஆட்சிக்கு வந்தால், என்னுடைய அதிரடியால் ஆட்சிக்கு வந்தோம்பாரு. வரலைன்னா, சேலம், ஈரோடு, சென்னையில் ஜெயிச்சிட்டோம். முக்குலத்தோர், முக்குலத்தோர்ன்னு சொல்லிக்கிட்டுப் பூச்சாண்டி காமிச்சிக்கிட்டிருந்தாரு. வந்துட்டா, சசிகலா இல்லாம டிடிவி இல்லாம.. ஜெயலலிதா இல்லாம.. எடப்பாடி பழனிசாமிதான் பெரிய ஆளுங்கிற இமேஜ் கொண்டுவர நினைகிறார்.

 

எல்லா சமுதாய மக்களுடனும் இணக்கதோடு போகணும்னு ஓபிஎஸ் நினைக்கிறார். எல்லாருக்கும் முன் உரிமை தர நினைக்கிறார். தேவர், கவுண்டர், வன்னியர் எல்லாரையும் இழுத்துட்டுப் போறாரு. எப்படியோ, காய்நகர்த்தி தேமுதிக வெளியேற்றிட்டாரு. இணக்கமா பேசாம கே.பி.முனுசாமி வேலையக் காட்டிட்டாரு. இந்த சோதனையைக் கடந்து, கட்சியைக் காப்பாற்றுவதற்காக, சிங்கிள் கூட்டமா சிங்கம் மாதிரி இருக்கிறது தென் மாவட்ட திமுக. இங்கே ஒரு தொகுதி ஜெயிக்கிறதும் சரி, எடப்பாடி பழனிசாமி 50 ஜெயிக்கிறதும் சரி. வன்னியர் பெல்ட் பூராவும் இட ஒதுக்கீட்டினால் அவருக்கு ஆதரவு. தென்மாவட்டங்களில் சீர்மரபினரை எதிராக்கிட்டாரு. 

 

AIADMK candidate list is subject to change

 

இதற்கு முன்னால், சசிகலாவுக்கு, டிடிவிக்கு ஆதரவாக இருந்த கள்ளர், ஜாதி அடையாளம் இல்லாமல், சீர்மரபினர் போராட்டம் மாதிரி இறங்கிட்டாங்க. காலில் விழறது, பாலில் சத்தியம் வாங்குறது என நாசூக்கா ஒரு அரசியல் நடந்துக்கிட்டிருக்கு. திட்டமிட்டு இந்த மாதிரி செயல் செய்வதில் ஓபிஎஸ்க்கு உடன்பாடு இல்லை. கட்சி நல்லா இருக்கணும்; எல்லாரையும் ஒருங்கிணைத்துப் போக வேண்டும். யார் மனதும் பாதிக்கப்படக்கூடாதுன்னு நினைக்கிறார். எடப்பாடி பழனிசாமியோ எடுத்தேன், கவிழ்த்தேன் என ஹிட்லர் மனநிலையில் இருக்கிறார்.

 

எடப்பாடி பழனிசாமிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் கருத்து வேறுபாடு உள்ள நிலையில், ஓ.பி.எஸ். தரப்பு நபர்கள், யாருக்கும் சீட் தரவில்லை. தற்போதைய வேட்பாளர் அறிவிப்பு மாறுதலுக்கு உட்பட்டது. நீ அறிவிச்சிக்கோ.. ஏ பாரம், பி பாரத்தில நான்தானே கையெழுத்து போடணும்னுட்டாரு. இதுல நீ ரப்பர் ஸ்டாம்ப் வச்சிக்கோ. ஏ.பாரம், பி பாரத்துக்கு வா... என பேசினாராம். அதனால், உறுதியான முறையில் வேட்பாளர் பட்டியல் மாறுதலுக்கு உட்பட்டது. இரண்டு நாட்களில் இது நடக்கும்” என்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்