ADVERTISEMENT

“பாராளுமன்றத்தில் மக்களின் குரலாக ஒலிப்பேன்” - அதிமுக வேட்பாளர் கருப்பையா

10:53 AM Apr 04, 2024 | ArunPrakash

திருச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ப. கருப்பையா பீமநகர் செடல் மாரியம்மன் கோயிலில் தரிசனம் செய்து பிரச்சாரத்தை தொடங்கினார். பின்னர் பீமநகர் பகுதிக்கு உட்பட்ட மார்சிங் பேட்டையில் இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தார்.

ADVERTISEMENT

பிரச்சாரத்தில் அவர் பேசுகையில் “திருச்சி மாவட்ட மக்களின் தேவைகள் என்னென்ன என்பது எனக்கு தெரியும். ஏற்கெனவே திருச்சி மக்களவை உறுப்பினராக இருந்தவர் என்னென்ன திட்டங்களை திருச்சிக்கு கொண்டு வந்தார் என்பதும் மக்களுக்குத் தெரியும். திருச்சி மக்களவைத் தொகுதியில் தேவையான மக்கள் நலத்திட்டங்களை கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன். அவற்றை நிறைவேற்ற மக்களவையில் மக்களின் குரலாக நான் ஒலிப்பேன். எனவே, எனக்கு அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். சில இடங்களுக்கு ஜல்லிக்கட்டு காளையுடன் சென்று வாக்குகள் சேகரித்தார்.

ADVERTISEMENT

பீமநகரைத் தொடர்ந்து, ஓ பாலம், அண்டகொண்டான், தென்னூர், வாமடம், அண்ணாநகர், உக்கிரமாகாளி அம்மன் கோயில் பகுதி, தென்னூர் ஹைரோடு, தில்லைநகர், உறையூர், சாலைரோடு, அண்ணாமலை நகர், பாண்டமங்கலம், புத்தூர், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.

இதில், அதிமுக புதுக்கோட்டை மாவட்ட செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான சி. விஜயபாஸ்கர், திருச்சி மாவட்டச் செயலாளர்கள் ப.குமார், ஜெ.சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், வளர்மதி,ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர் ஜோதி வாணன், மாவட்ட துணை செயலாளர்கள் வனிதா, பத்மநாதன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன்,இளைஞர் அணி மாவட்ட செயலாளர் முத்துக்குமார், மாணவரணி மாவட்ட செயலாளர் இன்ஜினியர் இப்ராம்ஷா, பகுதி செயலாளர்கள் எம்ஆர்ஆர்.முஸ்தபா, என்.எஸ்.பூபதி,ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி, இலக்கிய அணி மாவட்டசெயலாளர் பாலாஜி, இன்ஜினியர் ரமேஷ் நாட்ஸ் சொக்கலிங்கம், அக்பர்அலி,வசந்தம் செல்வமணி, தேமுதிக மாவட்ட செயலாளர் கணேஷ், மாவட்ட அவைத்தலைவர் வி.கே.ஜெயராமன், எஸ்டிபிஐ புதிய தமிழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT