வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர்..! (படங்கள்)

தமிழகத்தில் 6.04.2021 அன்று சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நிறைவடைந்தது. இதனையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையங்களுக்கு அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். அப்போது வேளச்சேரியில் 3 வாக்குப்பதிவு இயந்திரங்களை ஸ்கூட்டியில் தூக்கிச் சென்ற நபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்தனர். இது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எடுத்துச் செல்லப்பட்ட இயந்திரங்கள் பழுதடைந்த வாக்கு இயந்திரங்கள் என தேர்தல் ஆணையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

பின்னர் நடந்த தீவிர விசாரணையில், அந்த இயந்திரம் செயல்பட்டதும், அதில் 15 வாக்குகள் பதிவாகி இருந்ததும் தெரியவந்தது. அதனால் வேளச்சேரி தொகுதியில் சர்ச்சைக்குரிய 92வதுவாக்குச்சாவடியில் மட்டும் ஏப்ரல் 17ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், வேளச்சேரி தொகுதி 92வது பூத்துக்கான தேர்தல் நாளை மறுநாள் (17.04.2021) நடைபெறுவதையொட்டி இன்று அந்த பூத்துக்குட்பட்ட இடங்களில் அதிமுக வேட்பாளர் அசோகன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

admk election campaign velacherry
இதையும் படியுங்கள்
Subscribe