AIADMK-BJP alliance controversy ... OPS put an end!

கடந்த சட்டமன்றத் தேர்தலில்அதிமுகவின் தோல்விக்குப் பாஜகவுடனான கூட்டணிதான் காரணமென முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தெரிவித்திருந்தது அதிர்வலையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து அதற்குப் பதிலளிக்கும் வகையில் தமிழ்நாடு பாஜகவின் பொதுச்செயலாளர் கே.டி. ராகவன் தங்களுடைய தோல்விக்கு அதிமுகதான் காரணம்என்பதை வெளிப்படுத்தும் விதமாக'''உங்களால்தான்' என்ற எண்ணம் எங்களிடமும் உண்டு..." என அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

Advertisment

இதையடுத்து, அதிமுக- பாஜக கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும்தொடருமா என்பது தொடர்பான கேள்விகள் எழுந்தன. இந்நிலையில, பாஜக உடனான கூட்டணி தொடரும் என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் டிவிட்டர் பதிவில், ''தேச நலன், தமிழ்நாட்டின் நலன் கருதி அதிமுக - பாஜக கூட்டணி தொடரும். இதில் எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. பாஜக மீதும், மோடி மீதும் முழு நம்பிக்கை வைத்துள்ளோம்'' என விளக்கம் அளித்துள்ளார்.