Advertisment

ஊரக உள்ளாட்சித் தேர்தல்... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அதிமுக!

AIADMK announces rural local body elections

புதியதாகஅறிவிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. www.tnsec.tn.nic.in என்ற மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சித்தேர்தல் நடக்கவிருக்கும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் தங்கள் பெயர், வார்டு உள்ளிட்ட விவரங்களை அந்த இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இன்று சென்னை அடையாறில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, ''டிசம்பர் மாதத்துக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு முயன்றுவருகிறது. ஓரிரு மாதங்கள் கூடலாம் அல்லது குறையலாம்" எனத் தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித்தேர்தலுக்காகத்தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களைஅதிமுகநியமித்துள்ளது. வேலூர்- கே.பி,முனுசாமி, அக்ரி எஸ்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.ஆர்.கே.அப்பு, வேலழகன், காஞ்சிபுரம்-திண்டுக்கல் சீனிவாசன், கோகுல இந்திரா,காமராஜ், பெஞ்சமின், சோமசுந்தரம், திருப்பத்தூர்-செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், கருப்பணன், கே.சி.வீரமணி, செங்கல்பட்டு-தங்கமணி, பா.வளர்மதி, சிட்லபாக்கம் ஆர்.ராஜேந்திரன், ஆறுமுகம், கே.பி.கந்தன், ராணிப்பேட்டை-எஸ்.பி.வேலுமணி, சு.ரவி, பொள்ளாச்சி ஜெயராமன், உடுமலை ராதாகிருஷ்ணன், நெல்லை-தளவாய் சுந்தரம், கருப்பசாமி பாண்டியன், இசக்கி சுப்பையா, பரமசிவன், சீனிவாசன், இன்பதுரை, கணேசராஜா, விழுப்புரம்-ஓ.எஸ்-மணியன், சி.வி.சண்முகம், தென்காசி-ஆர்.பி.உதயகுமார், மனோஜ் பாண்டியன், கடம்பூர் ராஜு, ராஜேந்திரபாலாஜி, சி.கிருஷ்ணமுரளி, கள்ளக்குறிச்சி- எம்.சி.சம்பத், சி.விஜயபாஸ்கர், மோகன், குமரகுரு ஆகியோரை ஊரக உள்ளாட்சித் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாகஅதிமுகஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ் -இபிஎஸ் நியமித்துள்ளனர்.

ops_eps local election admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe