Advertisment

தொகுதி பங்கீடை முடிக்க தயாராகும் அதிமுக? தேமுதிக இடம்பெறுமா? 

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7, பாஜகவுக்கு 5, புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதியும், புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதியும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதியும் தொகுதி பங்கீடு செய்துள்ளது.

Advertisment

admk - office

இந்த நிலையில் இன்று காலை அதிமுக தேர்தல் அறிக்கை குழு தங்களது அறிக்கையை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடமும், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடமும் அளித்துள்ளது. தேர்தல் அறிக்கை தயாராக இருப்பதால் இன்றுடன் கூட்டணியை இறுதி செய்து தொகுதி பங்கீடை முடித்துவிடலாம் என்று அதிமுக தலைமை முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தாங்கள் கேட்ட தொகுதி எண்ணிக்கையும், தொகுதிகளையும் கொடுக்க வேண்டும் என்று கூறும் தேமுதிக, அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுமா என்று இருகட்சியின் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே வரும் 10ஆம் தேதி அதிமுக கூட்டணியில் தேமுதிக இணையும் என அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

admk edapadi palanisamy elections O Panneerselvam parliment statement
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe