actress Vindhya

Advertisment

ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி வந்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அக்டோபர் 7ஆம் தேதி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

வழிகாட்டுதல் குழுவில் மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், இஸ்லாமியர்கள், பெண்கள் உள்பட பலருக்குவாய்ப்பு தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு அதிமுகவில் நிலவுகிறது.

இதுகுறித்து 7ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற நடிகை விந்தியா கூறுகையில், ''11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் அனுபவம் மிக்கவர்கள் உள்ளனர். எதிர்காலத்தில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படும். எங்களுக்கு இங்கே எந்தவிதமான அவமரியாதையும் கிடையாது. இங்கு எல்லோரும் நன்றாக இருக்கிறோம். பெண்களுக்கு மரியாதை கொடுக்கப்படும் ஒரே கட்சி அதிமுக'' என்றார்.