AI technology kalaignar Praise for cm MK Stalin

திமுக தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி பவள விழாவும், ஆண்டுதோறும் கொண்டாடப்படும் முப்பெரும் விழாவும் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று (17.09.2024) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், பெரியார் விருது பாப்பம்மாளுக்கும், அண்ணா விருது அறந்தாங்கி 'மிசா' இராமநாதனுக்கும், பாவேந்தர் விருது கவிஞர் தமிழ் தாசனுக்கும், பேராசிரியர் விருது வி.பி. ராசனுக்கும், கலைஞர் விருது எஸ். ஜெகத்ரட்சகனுக்கும், மு.க. ஸ்டாலின் விருது எஸ்.எஸ். பழனிமாணிக்கத்திற்கும் வழங்கினார்.

Advertisment

திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த முப்பெரும் விழாவில் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, ஐ. பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தா.மோ. அன்பரசன், மா. சுப்பிரமணியன், சேகர்பாபு, மதிவேந்தன், பெரிய கருப்பன், ஆர். காந்தி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், உதயநிதி ஸ்டாலின், திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா எம்.பி., நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன், தயாநிதி மாறன், தமிழச்சி தங்கப்பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisment

 AI technology kalaignar Praise for cm MK Stalin

இந்நிகழ்ச்சியில், தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞர் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் பேசுகையில், “என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே, தந்தை பெரியார் வடித்த கொள்கையை, பேரறிஞர் அண்ணா வகுத்த பாதையை, என்னால் கட்டிக் காக்கப்பட்ட இனமான முழக்கத்தை ஓங்கி ஒலிக்கச் செய்து கம்பீரமாகக் கழகத்தை ஆட்சிப் பொறுப்பில் அமரச் செய்திருக்கும் தம்பி மு.க. ஸ்டாலினை எண்ணி எண்ணி என் நெஞ்சம் பெருமிதம் கொள்கிறது.

ஸ்டாலின் என்றாலே உழைப்பு, உழைப்பு, உழைப்புதான். கழகப் பணியில் 55 ஆண்டுகளாக ஆயராக உழைத்து வரும் திராவிடச் செம்மலாய், இந்தியாவின் முன் மாதிரி முதல்வராய், நல்லுலகம் போற்றும் நாயகராக விளங்குகிறார். சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி இவற்றின் பாதையில் கழக ஆட்சியை மிகச் சிறப்பாக வழி நடத்துகிறார். இனமானம், மொழி மானம், சுயமரியாதையைக் கண் போல் காக்கும் கடமை உணர்வைக் கண்டு நான் வாழ்த்துகிறேன் பாராட்டுகிறேன் வாழ்க பெரியார், அண்ணாவின் புகழ், ஓங்கு திராவிட மாடல் அரசு” எனப் பேசினார்.

Advertisment