Advertisment

“மீண்டும் இ.பி.எஸ். ஆட்சி” - ராஜேந்திரபாலாஜி சபதம்!

“Again EPS. Reign” - Rajendra Balaji Vow!

விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக மற்றும் திருத்தங்கல் கிழக்கு பகுதி கழகம் சார்பாக திருத்தங்கலில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டுப் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, “தமிழகத்தில் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் அள்ளிக் கொடுக்கும் தலைவர்களாக வாழ்ந்தனர். அதிமுகவை உருவாக்கிய எம்ஜிஆர்,ஜெயலலிதா செய்த சேவைதான் இன்றும் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது. அனைத்து குக்கிராமங்களிலும் கூடஏழைகளின் நெஞ்சில்நீங்கா இடம் பிடித்திருப்பவர் எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவும், எடப்பாடி பழனிசாமியும்எம்ஜிஆரின் வழியில் ஆட்சி நடத்தினார்கள். எம்.ஜி.ஆர் ஆட்சியை, ஜெயலலிதா ஆட்சியை எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அமைக்க,எம்.ஜி.ஆர்.பிறந்த நாளில் சபதம் ஏற்போம்” என்றார்.

Advertisment
admk eps
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe