பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவை தினகரன் சந்தித்து பேசியதாக சொல்லப்படுகிறது. அண்மையில் சசிகலாவை சிறையில் சந்தித்த தினகரன், விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக சார்பில் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும். அதனையடுத்து தேர்தல் செலவுக்கும் பணம் வேண்டும் என்று கேட்டதாக சொல்லப்படுகிறது. இதைக் கேட்டு டென்ஷனான சசிகலா, தேர்தலில் யாரும் நிற்க வேண்டாம். இனி என்னால் பணமும் கொடுக்க முடியாது என்று கடுமையாகப் பேசி அனுப்பிவிட்டதாக கூறுகின்றனர்.

Advertisment

ammk

இதனால் அப்செட்டான தினகரன் வெளியே வந்து, எங்களுக்குப் பொதுச் சின்னம் கிடைக்காததால் இடைத்தேர்தலில் நிற்கவில்லை என்று அறிவித்துவிட்டார். சசி தரப்போ டிசம்பர், ஜனவரியில் சசிகலா விடுதலையாவார் என்று அழுத்திச் சொல்வதோடு, அவர் வெளியே வந்ததும் தினகரன் ஓரம்கட்டப்படுவார் என்றும் அதன் பின்னர் எடப்பாடியும் சசிகலாவும் கைகோப்பார்கள் என்றும் கூறுகின்றனர். அந்த டீலுக்குப் பிறகுதான் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வின் பொதுக்குழுவே கூடப் போகுது என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசி வருவதாக சொல்லப்படுகிறது.