Skip to main content

விடுதலையான பிறகு கர்நாடகாவில் குடியேறுகிறாரா சசிகலா? 

Published on 24/12/2019 | Edited on 24/12/2019

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மரணம் அடைந்த நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என்று உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. 4 ஆண்டுகள் சிறை தண்டனையையும் உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. இதைத்தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந்தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். இதனையடுத்து வருமான வரித் துறையினர் கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் சசிகலா மற்றும் அவரது உறவினர் வீடுகள் உட்பட 187 இடங்களில் சோதனை நடத்தினர். இது தொடர்பான வழக்கில் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி வழங்கக் கோரி, சசிகலா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. பின்பு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வருமானவரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மதிப்பீட்டு பணிகள் ஏற்கனவே நிறைவடைந்து விட்டது. எனவே சசிகலாவின் மனு செல்லுபடி ஆகாது என்று தெரிவித்து இருந்தார். இந்த வழக்கில் சசிகலாவின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். 
 

sasikala



இந்த நிலையில் சிறையில் இருக்கும் சசிகலா கன்னட மொழியை பேசவும், எழுதவும் தெரிந்து கொண்டார் என்று சொல்கின்றனர். மேலும் அங்கு இருக்கும் சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் கைதிகளுடன் கன்னடத்தில் பேசி வருகிறார் என்றும் தகவல் சொல்லப்படுகிறது. இதனால் விடுதலைக்குப் பின் தமிழக அரசியலில் எதிர்பார்த்த இடம் கிடைக்காவிட்டால் கர்நாடகாவில் குடியேறும் வாய்ப்பு இருந்தாலும் இருக்கலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசி வருகின்றனர். அதோடு மத்திய அரசு சசிகலா மீது புதிய வழக்குகளை போட்டு சிக்க வைக்க திட்டம் போட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் விடுதலைக்குப் பின்பும் பல வழக்குகளை சசிகலா சந்திக்க நேரிடும் என்று கூறிவருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்