ptr

Advertisment

சட்ட அமைப்புக்கு மீறி யார் கொடுக்கும் அறிவுரையும் எங்களுக்கு தேவை இல்லை என தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

மதுரை எஸ்.எஸ்.காலனியில் உள்ள தனியார் மண்டபத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் 586 பயனாளிகளுக்கு 93 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வழங்கினார். இந்நிகழ்வில் பேசிய அவர் "நோபல் பரிசு பெற்ற பொருளாதார பேராசிரியர், ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் மற்றும் பிரதமருக்குத் தலைமை ஆலோசகர்களாக இருந்த இருவரின் ஆலோசனைகளை பெற்று செயல் பட்டு வருகிறோம். சட்ட அமைப்புக்கு மீறி யார் கொடுக்கிற அறிவுரையும் எங்களுக்குத் தேவை இல்லை. நல்ல கருத்து யார் கூறினாலும் அது மனிதநேயமுள்ள கருத்தாக இருந்தால் அதை செயல்படுத்தும் முதல் அரசாக நாங்கள் இருப்போம்" எனக் கூறினார்.