Advertisment

“மாபெரும் சரித்திரத்தை எடப்பாடி தலைமையில் நடத்தினோம்” - ஆர்.பி. உதயகுமார்

admk udayakumar talks about tamilnadu government issue at madurai vadipatti 

கள்ளச்சாராயத்தைஒழிக்கவும், போலி மதுபானங்களால்ஏற்படும் உயிரிழப்புகளைத்தடுக்கவும்தமிழக அரசை வலியுறுத்தி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும்உள்ள மாவட்டத்தலைநகரங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

இந்நிலையில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நடைபெற்றகண்டன ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டு பேசுகையில், "அமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜன், ‘30000 கோடி ரூபாயை திமுக குடும்பத்தில் எப்படி கையாள்வது என தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்’ எனச் சொன்னார். அதனைத்தான் புகாராக எடுத்துக் கொண்டு, எடப்பாடி பழனிசாமி தலைமையில் 50 ஆயிரம் அதிமுகவினர் ஆளுநரிடம் புகார் கொடுக்கச் சென்றோம். ஆனால்இந்த திமுக அரசின் காவல்துறை, ஐம்பது கார்கள் மற்றும் பேருந்துகளை கொண்டு வந்து நிறுத்தியது. ஆனால், தலைநகர் சென்னையில், 50 ஆயிரம் பேர் வர இருந்த பேரணியில்,ஐந்து லட்சம் பேர் கூடி ஒரு மாபெரும் சரித்திரத்தை எடப்பாடி தலைமையில் நடத்தினோம். இந்தியா முழுக்க இது தலைப்பு செய்தி ஆனது.

Advertisment

திமுக அரசு வீட்டுக்குப் போகிறநாளும், எடப்பாடி பழனிசாமி முதல்வராகபொறுப்பேற்கும் நாளும்தான் எங்களுக்கு பொன்னான நாள் என்று மக்கள்கைகளில் பதாகைகளை ஏந்திக் கொண்டு இருக்கிறார்கள். அமைச்சர் செந்தில் பாலாஜி செல்லாத கட்சியேஇல்லை. முதலில் மதிமுகவில்இருந்தார். திமுகவில் இருந்தார். அதிமுகவில் இருந்தார். டிடிவி தினகரன் கட்சிக்கு சென்றார். மறுபடியும் திமுகவிற்கு சென்றார். தமிழகத்தில் கள்ளச்சாராயம்ஆறு போல் ஓடுகிறது . இதனால் 25 அப்பாவி உயிர் பறிபோயிருக்கிறது. செந்தில் பாலாஜியைஅமைச்சர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு ஜப்பானில் இருந்து நீங்கள் வருவதற்கு தயாரா" எனப் பேசினார்.

admk madurai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe