Advertisment

எடப்பாடி பழனிசாமியை விடுதலை செய்ய வலியுறுத்தி அதிமுகவினர் மறியல்

ADMK struggle against Edappadi Palaniswami demanding release

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை விடுதலை செய்ய வலியுறுத்தி திருச்சியில் அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

சென்னையில் தமிழக அரசை கண்டித்தும்சட்டசபை மரபுகளை மீறிய சபாநாயகரை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல் துறையினர்கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையை கண்டித்து திருச்சியில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

இதன் ஒரு பகுதியாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு திருச்சி மாநகர மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ரத்தினவேலு தலைமையில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சீனிவாசன், மாவட்ட உறுப்பினர் அரவிந்தன் மற்றும் நிர்வாகிகள் என பலர் தமிழக அரசை கண்டித்தும், கைது செய்யப்பட்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியைவிடுதலை செய்ய வலியுறுத்தியும்கோஷமிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட 50 க்கும் மேற்பட்ட அதிமுகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

admk tngovt
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe