Advertisment

அவர் நமக்குத் தேவையா? எடப்பாடி பழனிசாமியின் வியூகத்தால் அப்செட்டில் இருக்கும் சீனியர் அமைச்சர்கள்!

admk

Advertisment

தி.மு.க.வின் ஓ.எம்.ஜி குழுவில் இருந்த முன்னாள் ஆலோசகரான சுனில், தற்போது அ.தி.மு.க.வுக்கு வேலை செய்ய அக்கட்சியோடு அக்ரிமெண்ட் போட்டிருக்கிறார். ஆரம்பத்தில் வடநாட்டு கார்பரேட் அரசியல் இங்கே எடுபடாது என்று ஆளுங்கட்சியின் சீனியர்கள் சொன்னதால், சுனில் பக்கம் எடப்பாடி திரும்பவில்லை. அவரோட மகன் மிதுன் மூலம் சுனில் மூவ் செய்ய, அ.தி.மு.க.வுடனான ஒப்பந்தம் ஓ.கே.வாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. தி.மு.க.வில் ஸ்டாலின் மருமகன் சபரீசன் வியூகப்படிதான் பிரசாந்த் கிஷோர் டீம் வேலை செய்கின்றனர். அதுபோல் அ.தி.மு.க.வில் எடப்பாடி மகன் மிதுனின் கீழ்தான் சுனில் வேலை செய்வார் என்று கூறுகின்றனர். சோசியல் மீடியாக்களில் முதல்வரின் இமேஜை உயர்த்திக் காட்டும் சுனிலின் மூவ் எடப்பாடியைக் கவர்ந்திருப்பதாகச் சொல்கின்றனர். சுனிலை ஏகத்துக்கும் அவர் நம்பத் தொடங்கியிருக்கிறார் என்றும் கூறிவருகின்றனர். ஆனால் அமைச்சர்கள் உள்ளிட்ட அ.தி.மு.க. சீனியர்கள், சுனில் குருப்பை எதிர்க்கிறார்கள் என்று பேச்சு அடிபட்டு வருவதாகச் சொல்கின்றனர்.

ஏன் என்று விசாரித்த போது, கடந்த தேர்தலில் தி.மு.க.வை ஜெயிக்க வைக்க சுனில் போட்டுக் கொடுத்த வியூகம் வொர்க் அவுட் ஆகலைன்னு சென்ட்டிமென்ட்டாக பார்ப்பதாகச் சொல்லப்படுகிறது. அவர் நமக்குத் தேவையா? தி.மு.க.வின் ரகசியங்களை அறிந்தவர் என்பதற்காக அவரை நாம் பயன்படுத்தினால், நாளை நமது ரகசியங்களை அவர் தி.மு.க.வுக்குக் கொண்டு போகமாட்டார் என்பதற்குஎன்ன உத்தரவாதம் என்று கேட்கிறார்கள். இதுதொடர்பாக எடப்பாடி சொன்ன விளக்கங்களிலும் அவர்களுக்குத் திருப்தி இல்லை என்று பேசி வருகின்றனர். ஏற்கனவே பல பிரச்சினைகளுடன் தேர்தல் ஆலோசகர் பிரச்சினையிலும் சீனியர்களுக்கு எடப்பாடி மீது மனக் கசப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

admk elections minister politics
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe