Advertisment

பிஜேபியால் வெளியாகும் அதிமுக ரகசியம்!

சமீபத்தில் நீட் தேர்வு தொடர்பான விவாதம் தமிழக சட்ட சபையில் நடைபெற்ற போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சியான திமுக நீட் தேர்வு மசோதாவை மத்திய அரசு திருப்பி அனுப்பியது பற்றி கேள்வியை எழுப்பியது. இதற்கு பதில் அளித்த அதிமுக அரசு இப்படி ஒரு மசோதா பைல் திரும்பி வரவே இல்லை என்று கூறியது. அதிமுக அரசின் இந்த பதிலால் முன்னாள் அதிகாரிகள் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நீட் தேர்வு தொடர்பான மசோதாவை மத்திய அரசு திருப்பி அனுப்பிய விஷயம் அதிமுக அரசுக்கும், அதிகாரிகளுக்கும் முன்பே தெரியும். தெரிந்தே தான் அதை அவர்கள் வெளியே கூறாமல் மறைத்துள்ளனர் என்று ஓய்வு பெட்ரா அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisment

admk

மேலும் இதுபோல் எத்தனை மசோதாக்கள் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேறி மத்திய அரசால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பது ரகசியமாகவே இருக்கிறது என்று தெரியவில்லை என ஓய்வு பெற்ற அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கின்றனர்.இதில் மேகதாது விவகாரம், ஹைட்ரோ கார்பன், மீத்தேன், எழுவர் விடுதலை, முல்லை பெரியார் பிரச்சனை, வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும், இப்படி பல கோரிக்கைகள் நிரகாரிக்கப்பட்டு அந்த பைல் மாநிலத்துக்கு திரும்பி வந்து இருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர்.

Advertisment
admk elections politics
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe