Advertisment

அதிமுகவில் வைத்திலிங்கத்தின் அமைச்சர் கனவிற்கு செக் வைத்த தம்பிதுரை... க்ரீன் சிக்னல் கொடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

கரோனா நெருக்கடி முடிந்ததும், மோடி தன் அமைச்சரவையை விரிவுபடுத்த போகிறார் என்ற தகவல் பரவி வருகிறது. இது பற்றி விசாரித்த போது, அ.தி.மு.க. தரப்போ, சீனியர் என்கிற வகையில் வைத்திலிங்கத்தையும், ஜூனியர் என்கிற வகையில் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்தையும் மத்திய மந்திரி சபைக்குப் பரிந்துரைக்கத் திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில் மாநிலங்களவை எம்.பியாக தேர்வாகும் தம்பிதுரையோ, வைத்திலிங்கத்தின் எம்.பி.பதவி இன்னும் ரெண்டு வருசத்தில் முடிய போகிறது. என் பதவிகாலமோ 6 வருசத்துக்கு இருக்கிறது. அதனால் எனக்குத்தான் மத்திய மந்திரி பதவியை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குநெருக்கடி கொடுக்க, தம்பிதுரைக்கு க்ரீன் சிக்னல் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Advertisment

admk

அதேபோல் கரோனா வைரஸ் தாக்கத்தால் பல இடங்களிலும் தமிழர்கள் கஷ்டப்படுவதாக சொல்லப்டுகிறது. நான்கு வருசத்துக்கு ஒருமுறை நடக்கும் உலகக் கால்பந்துப் போட்டி இந்த முறை கத்தாரில் நடப்பதால், ஸ்டேடியங்களை உருவக்கும் பணி இந்தக் கரோனா ஆபத்துக்கு மத்தியிலும் விறுவிறுப்பாக நடக்கிறது. இதில் நம் தமிழகத்தைச் சேர்ந்த 700 கூலித் தொழிளாளர்களும் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அந்தத் தொழிலாளர்களும், அவங்க குடும்பத்தினரும் பீதியிலும், பதட்டத்திலும் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

Advertisment
coronavirus modi politics eps minister admk
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe