Skip to main content

இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் அமைச்சரை புறக்கணிப்போம்; திருச்சியில் போஸ்டர் யுத்தம்!

Published on 03/09/2020 | Edited on 03/09/2020

 

admk trichy posters making sensational

 

"புறக்கணிப்போம் புறக்கணிப்போம் இஸ்லாமியர்களை தொடர்ந்து புறக்கணிக்கும்  அ.இ.அ.தி.மு.க திருச்சி மாவட்ட கழக செயலாளர் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், திருச்சி பாலக்கரை பகுதி செயலாளர் ஜனாப் கலீல் ரகுமானை பதவியில் இருந்து எடுத்து இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் அமைச்சரையும் அதிமுகவினரையும் சட்டமன்றத் தேர்தலில் புறக்கணிப்போம் புறக்கணிப்போம்" என இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் சார்பாக திருச்சி மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இதுகுறித்து அ.தி.மு.க வட்டாரத்தில் விசாரித்து போது  திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.கவிற்கு புதியதாக பகுதி செயலாளர்கள் அறிவிப்பு வெளியானது.

 

அதில் பாலக்கரை பகுதி செயலாளராக இருந்த கலீல் ரகுமான் நீக்கப்பட்டு புதிய பகுதி செயலாளராக 
சுரேஷ் குப்தா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதன் காரணமாகவே இப்போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது என்றனர்.
 

admk poster making sensational in trichy


இந்த போஸ்டர்கள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு எதிரான மனநிலையை உருவாக்குகிறது
என்பதால், "நன்றி! நன்றி! நன்றி! கரோனா பேரிடர் காலத்தில் சுமார் 3,000 இஸ்லாமிய குடும்பங்கள் பயன்பெறும் வகையில் அரிசி, மளிகை மற்றும் காய்கறிகள் அடங்கிய நிவாரணப் பொருட்கள் வழங்கிய மாண்புமிகு அன்பு அண்ணன் வெல்லமண்டி நடராஜன், சுற்றுலாத் துறை அமைச்சருக்கு மனமார்ந்த நன்றி! நன்றி! நன்றி! என இஸ்லாமிய அ.தி.மு.க நிர்வாகிகள் பெயருடன் திருச்சி மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க போஸ்டரும் திருச்சியில் பதிலுக்கு ஒட்டியுள்ளது பரபரப்பை கூட்டியுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.